இந்திராணி முகர்ஜிக்கு ஜாமின் வழங்க கூடாது: உச்சநீதிமன்றத்தில் சிபிஐ பதில்மனு தாக்கல்

இந்திராணி முகர்ஜிக்கு ஜாமின் வழங்க கூடாது என உச்சநீதிமன்றத்தில் சிபிஐ பதில்மனு தாக்கல் செய்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

பிரபல தனியார் தொலைக்காட்சியில் தலைமைப் பொறுப்பு வகித்த பீட்டர் முகர்ஜியின் மனைவி இந்திராணி முகர்ஜி. இவர் தனது முன்னாள் கணவர் மூலம் பிறந்த மகள் ஷீனா போராவை கொலை செய்ததாக கடந்த 2015-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். மும்பையில் நடந்த இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பீட்டர் முகர்ஜிவுக்கு அவரது முன்னாள் மனைவி மூலம் பிறந்த மகன் ராகுலை ஷீனா முறை தவறி காதலித்ததால் இந்தக் கொலை நடந்ததாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் இந்திராணி, அவரது முன்னாள் கணவர் சஞ்சீவ் கன்னா, கார் டிரைவர் ஷ்யாம்வர் ராய் ஆகியோரும், பிறகு பீட்டர் முகர்ஜியும் கைது செய்யப்பட்டு, மும்பை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்திராணி முகர்ஜியின் ஜாமீன் மேல்முறையீடு மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.கடந்தமுறை விசாரணையின் போது இந்திராணி முகர்ஜியின் ஜாமீன் மேல்முறையீடு மனு தொடர்பாக பதில் அளிக்க சி.பி.ஐ.க்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளிவைத்தது.

இந்த நிலையில், இந்திராணி முகர்ஜிக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என உச்சநீதிமன்றத்தில் சிபிஐ பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com