

புதுடெல்லி,
கடந்த மே மாதத்தில், நாட்டின் தொழில் உற்பத்தி குறியீட்டு எண் 116.6 புள்ளிகளாக இருந்தது. இது, கடந்த ஆண்டு இதே மே மாதத்துடன் (90.2 புள்ளிகள்) ஒப்பிடுகையில், 29.3 சதவீதம் அதிகம்.
உற்பத்தி துறை, சுரங்கம், மின்சாரம் ஆகியவற்றின் உற்பத்தி சிறப்பாக இருந்ததால், இந்த உயர்வு ஏற்பட்டுள்ளது.
இருப்பினும், கொரோனாவுக்கு முன்பு இருந்த நிலையை எட்டவில்லை. அதாவது, 2019-ம் ஆண்டு மே மாதம் இருந்த 135.4 புள்ளிகளுடன் ஒப்பிடுகையில், இது குறைவாகும்.