பள்ளி வளாகத்தில் புகுந்து ரகளை: பஸ் தீவைத்து எரிப்பு

வன்முறை கும்பல் ஒன்று பள்ளி வளாகத்தில் புகுந்து ரகளையில் ஈடுபட்டது. இந்த சம்பவத்தில் அந்த பள்ளியின் பஸ் தீவைத்து எரிக்கப்பட்டது.
பள்ளி வளாகத்தில் புகுந்து ரகளை: பஸ் தீவைத்து எரிப்பு
Published on

திருவனந்தபுரம்,

திருவனந்தபுரம் அருகே கஞ்சிரம்குளம் என்ற பகுதியில் லூர்து மவுண்ட் பள்ளி செயல்பட்டு வருகிறது. நேற்று இந்த பள்ளிக்கூட வளாகத்தில் திடீரென சில மர்ம நபர்கள் நுழைந்து அங்கே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த, பள்ளிக்கூட பஸ்களை தீ வைத்து எரித்தனர். இதுமட்டும் அல்லாமல், பள்ளிக்கூடத்துக்கும் தீ வைக்க முயன்றதோடு, பள்ளி அலுவலகம் மற்றும் அங்கு இருந்த விலை உயர்ந்த பொருட்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தவும் முயன்று உள்ளனர். இந்த வன்முறை கும்பல் தாக்குதலில், ஒரு பஸ் எரிந்து நாசமானது. 5 பஸ்கள் சேதம் அடைந்தன.

பள்ளியில், நடந்த இந்த திடீர் தாக்குதல் அந்த பகுதியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அங்கு மேலும் இது போன்று அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் இருக்க, பாதுகாப்பு கருதி போலீசார் குவிக்கப்பட்டனர். வன்முறையில் ஈடுபட்டவர்களை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com