பஞ்சாப் எல்லையில் ஊடுருவல் முயற்சி - 2 பேரை சுட்டுக்கொன்ற பி.எஸ்.எப். படை வீரர்கள்

இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற இருவர் மீது எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர்.
பஞ்சாப் எல்லையில் ஊடுருவல் முயற்சி - 2 பேரை சுட்டுக்கொன்ற பி.எஸ்.எப். படை வீரர்கள்
Published on: 

சண்டிகர்,

பஞ்சாப் மாநிலம் தார்ன் தரன் மாவட்டத்தில் சர்வதேச எல்லைப் பகுதி அமைந்துள்ளது. அங்கு எல்லை பாதுகாப்பு படை(பி.எஸ்.எப்.) வீரர்கள் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சர்வதேச எல்லை வழியாக நேற்று மதியம் சுமார் 12 மணியளவில் இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற 2 நபர்களை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் எச்சரித்துள்ளனர். இருப்பினும், எச்சரிக்கையை மீறி அவர்கள் இந்திய எல்லைக்குள் நுழைய முயன்றதால் அவர்கள் மீது எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர்.

இந்த துப்பாக்கி சூட்டில், இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 2 நபர்களும் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதையடுத்து எல்லை பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. உயிரிழந்த நபர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com