இந்தியாவுக்குள் ஆப்கானிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவல்...? உளவு துறை எச்சரிக்கை

இந்தியாவுக்குள் பண்டிகையை முன்னிட்டு ஆப்கானிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்த கூடும் என உளவு துறை எச்சரிக்கை விடுத்து உள்ளது.
இந்தியாவுக்குள் ஆப்கானிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவல்...? உளவு துறை எச்சரிக்கை
Published on

புதுடெல்லி,

இந்தியாவில் பண்டிகை காலம் வரவிருக்கிற நிலையில், பாகிஸ்தானை அடிப்படையாக கொண்ட பயங்கரவாதிகளுடன் இணைந்து, ஆப்கானிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள் ஊடுருவி காஷ்மீரில் தாக்குதல் நடத்த கூடும் என உளவு துறை எச்சரிக்கை விடுத்து உள்ளது.

இதுபற்றி அதிகாரி ஒருவர் கூறும்போது, லஷ்கர் இ தொய்பா, ஹர்காட் உல் அன்சார் மற்றும் ஹிஜ்புல் முஜாகிதீன் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள் நாட்டுக்குள் ஊருடுவ கூடும்.

அவர்களுக்கு ஐ.எஸ்.ஐ. ஆதரவு பெற்ற பாகிஸ்தானை அடிப்படையாக கொண்ட பயங்கரவாதிகள் உதவிட கூடும். இதுபோன்ற 40 பயங்கரவாதிகள் பூஞ்ச் ஆற்றை கடந்து இந்தியாவுக்குள் ஊடுருவ பயிற்சி பெற்றுள்ளனர்.

அவர்கள் டிபன் வெடிகுண்டு தயாரிக்கும் பயிற்சி பெற்றவர்கள். இதற்கான மூல பொருட்களை இந்தியாவில் ஸ்லீப்பர் செல்களாக செயல்பட கூடிய நபர்கள் வழங்குவார்கள் என தெரிவித்து உள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com