5 ஆண்டுகளில் ஊடுருவல்காரர்கள் நாட்டில் இருந்து வெளியேற்றப்படுவர்; அமித்ஷா

அசாம் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.
5 ஆண்டுகளில் ஊடுருவல்காரர்கள் நாட்டில் இருந்து வெளியேற்றப்படுவர்; அமித்ஷா
Published on

கவுகாத்தி,

அசாம் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநில முதல்-மந்திரியாக ஹிமந்தா பிஸ்வா சர்மா செயல்பட்டு வருகிறார்.

இதனிடையே, 126 தொகுதிகளை கொண்ட அசாம் சட்டசபைக்கு மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு ஓரிரு மாதங்களே உள்ள நிலையில் அங்கு அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தை தொடங்கியுள்ளன.

இந்நிலையில், மத்திய உள்துறை மந்திரியும் பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா இன்று அசாம் சென்றுள்ளார். அவர் அசாம் போலீசின் 10வது படாலியன் பிரிவிற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

இந்நிகழ்ச்சியில், அமித்ஷா பேசியதாவது,

ஊடுருவல்காரர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தில் இந்த புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளது. ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களில் இருந்து ஊடுருவல்காரர்களை வெளியேற்றுவது மட்டும் போதாது. ஊடுருவல்காரர்கள் இங்கிருந்து வெளியேறி வேறொரு நிலத்தை ஆக்கிரமிப்பார்கள்.

ஊடுருவல்காரர்களை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும். சட்டவிரோத அகதிகள், ஊடுருவல்காரர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து மட்டுமின்றி அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டை விட்டு வெளியேற்றுவோம்.

சட்டவிரோத அகதிகள் காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கி என்பதால் அவர்களை காங்கிரஸ் கட்சி வெளியேற்றாது. ஊடுருவல்காரர்களை பாதுகாக்கும் காங்கிரசின் கொள்கைகளால் அசாமின் அடித்தளம், மக்கள், நிலம் ஆபத்தில் உள்ளது.

ஊடுருவல்கார்களை வெளியேற்றுவதில் காங்கிரஸ் உறுதியாக இருந்தால் தேர்தல் அறிக்கையில் அதை கூறவேண்டுமென ராகுல் காந்திக்கு நான் சவால் விடுகிறேன்’ என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com