ஐஎன்எஸ் உதயகிரி, ஹிம்கிரி: இந்திய கடற்படையில் புதிதாக 2 கப்பல்கள் சேர்ப்பு

இந்திய கடற்படைக்கு ஐ.என்.எஸ். விக்ராந்த், ஐ.எஸ்.எஸ். விக்ரமாதித்யா உள்ளிட்ட சுமார் 150 போர்க்கப்பல்கள், நீர்மூழ்கி கப்பல்கள் உள்ளன.
புதுடெல்லி,
இந்திய கடற்படை உலக நாடுகளுக்கு சவால் விடும் வகையில் உள்ளளன. இதனை மேலும் பலப்படுத்தும் வகையில், புதிய போர் கப்பல்கள் கடற்படையில் இணைக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக உதயகிரி மற்றும் ஹிம்கிரி போர் கப்பல்கள் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டுள்ளன. பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணைகளை தாங்கி செல்லும் வகையில், அதிநவீன தொழில்நுட்ப அமைப்புகளுடன் ₹45 ஆயிரம் கோடி மதிப்பில் இந்த கப்பல்கள் கட்டப்பட்டன.
இந்திய கடற்படையின் கிழக்கு கடற்படை தலைமையகத்தில் இன்று நடைபெற்ற வரலாற்று சிறப்பு மிக்க விழாவில், பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் , இரு கப்பல்களையும் நாட்டுக்கு அர்ப்பணித்தார். இரண்டு கப்பல்களும் கடலில் ஆபத்தான மற்றும் சவாலான நடவடிக்கைகளில் புரட்சிகர மாற்றத்தை உருவாக்கும் என்று கூறிய ராஜ்நாத்சிங், நம் நோக்கம் சக்தியைக் காட்டுவது அல்ல. இந்தியா ஒருபோதும் ஆக்கிரமிப்புக் கொள்கையை நம்பியதில்லை, நாம் எப்போதும் முதலில் எந்த நாட்டையும் தாக்கியதில்லை என்பது உலகுக்குத் தெரியும்”என்று கூறினார்.






