

மும்பை,
மத்திய பாதுகாப்புத்துறையின் 15 பி திட்டத்தின் கீழ் 4 அதிநவீன போர்க்கப்பல்கள் உள்நாட்டில் தயாரிக்கப்படுகின்றன. இதில், முதல் போர்க்கப்பலான ஐ.என்.எஸ். விசாகப்பட்டினம் மும்பை கட்டுமான தளத்தில் தயாரிக்கப்பட்டு அனைத்து சோதனைகளையும் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
நவீன கருவிகள், வசதிகள் உள்ள இந்த போர்க்கப்பலை மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் நேற்று மும்பை, கடற்படை நேவல் டாக்யார்டில் நடந்த விழாவில் நாட்டுக்கு அர்ப்பணித்தார். 7 ஆயிரத்து 400 டன் எடையுள்ள இந்த போர்க்கப்பல் எதிரிகளின் ரேடார்களில் சிக்காமல், எதிரிகளின் ஏவுகணைகள், கப்பல்களை தாக்கி அழிக்கும் திறன் கொண்டது.
இதேபோல அணு ஆயுதங்கள், உயிரியல் மற்றும் வேதியியல் தாக்குதலுக்கு எதிராக போரிடும் சாதனங்களும் ஐ.என்.எஸ். விசாகப்பட்டினத்தில் இடம்பெற்று உள்ளது.