இன்ஸ்டாகிராம் பழக்கம்: கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை

திருமணம் செய்துகொள்வதாக கூறி, கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இன்ஸ்டாகிராம் பழக்கம்: கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை
Published on

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தை சேர்ந்தவர் 25 வயது மாணவி. இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் கலபுரகியை சேர்ந்த சிவானந்தா (27) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் சிவானந்தா கர்நாடக ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணியாற்றி வந்துள்ளார்.

முதலில் நண்பர்களாக பழகிய இவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. மேலும் சிவானந்தா, மாணவியை திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார். இதனை நம்பிய அந்த மாணவி, சிவானந்தாவை காதலிக்க தொடங்கியுள்ளார். பின்னர் காதலர்கள் 2 பேரும் பல்வேறு இடங்களுக்கு சென்றும், தங்கும் விடுதியில் அறை எடுத்து உல்லாசமாகவும் இருந்துள்ளனர்.

இதையடுத்து அவர்களுக்கு அடிக்கடி சண்டை வர தொடங்கியுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த சிவானந்தா மாணவியை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று கூறி, தனது காதலை முறித்து கொள்ளுமாறு மாணவியிடம் கூறியுள்ளார். இதில் மனமுடைந்த அந்த மாணவி சிவானந் தாவிடம் தொடர்ந்து மன்னிப்பு கேட்டு வந்துள்ளார்.

ஆனால் அதற்கு சிவானந்தா, மாணவியின் செல்போன் எண் மற்றும் சமூக வலைதள கணக்கை 'பிளாக்' செய்துள்ளார். மாணவியை திருமம் ணம் செய்து கொள்ள மாட்டேன் என்றும் திரும்பவும் கூறியுள்ளார். இது குறித்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் தனது குடும்பத்தில் உள்ள பெரிய வர்களை அழைத்து கொண்டு சிவானந்தாவின் வீட்டுக்கு சென்று இதுகுறித்து கேட்டுள்ளனர்.

இதற்கு சிவானந்தாவின் பெற்றோர் மாணவியையும், குடும்பத்தினரையும் தகாத வார்த்தைகளால் திட்டி, திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். பின்னர் இதுகுறித்து மாணவி மற்றும் அவரது பெற்றோர் பெலகாவி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

அதன்பேரில் சிவானந்தா மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை விசாரணைக்கு ஆஜராகுமாறு தெரிவித்துள்ள னர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com