

புதுடெல்லி,
வங்கியில் கணக்கு மற்றும் வைப்புத்தொகை வைத்திருப்பவர்களுக்கு வங்கி திவால் ஆனாலோ அல்லது பேரிடரில் சேதமடைந்தாலோ தற்போது காப்பீட்டு தொகையாக ரூ.1 லட்சம் வழங்கப்படுகிறது. வங்கி கணக்கில் எவ்வளவு பணம் வைத்திருந்தாலும் காப்பீட்டு தொகை ரூ.1 லட்சம்தான் கிடைக்கும். இந்த காப்பீட்டு தொகையை ரூ.5 லட்சமாக உயர்த்தி பட்ஜெட்டில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.