மகளிர் சுய உதவிக்குழுவை சேர்ந்த பெண்களுக்கு வட்டி மானியம் வழங்கப்படும் -நிர்மலா சீதாராமன்

மகளிர் சுய உதவிக்குழுவை சேர்ந்த பெண்களுக்கு வட்டி மானியம் வழங்கப்படும் என நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
மகளிர் சுய உதவிக்குழுவை சேர்ந்த பெண்களுக்கு வட்டி மானியம் வழங்கப்படும் -நிர்மலா சீதாராமன்
Published on

புதுடெல்லி,

மத்திய பட்ஜெட்டுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. தொடர்ந்து பட்ஜெட் உரை தொடங்கியது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்து பட்ஜெட் உரையை வாசிக்க தொடங்கினார்.

அதன் முக்கிய விவரங்கள் வருமாறு:-

நாட்டின் பெண்கள் முன்னேறாமல் உலகில் எந்த நாடும் முன்னேற முடியாது.

பெண்களின் பங்களிப்பு அதிகரிக்க வேண்டும் என நம்புகிறது இந்த மத்திய அரசு. பெண்களின் பங்களிப்பை கிராம பொருளாதாரம் அதிகமாக ஊக்குவிக்கிறது. சமூக பொருளாதார மேம்பாடு என்பது பெண்களின் பங்களிப்பால் மட்டுமே சாத்தியமாகும்.

மகளிர் சுய உதவிக்குழுவை சேர்ந்த பெண்களுக்கு வட்டி மானியம் வழங்கப்படும். இதுவரையில் இல்லாத அளவில் தற்போதைய நாடாளுமன்றத்தில் 78 பெண் உறுப்பினர்கள் உள்ளனர் என்றார் நிர்மலா சீதாராமன்.

ஒரு சுய உதவி குழுவில் ஒரே ஒரு பெண் உறுப்பினர் இருந்தால் கூட, முத்ரா திட்டத்தின் கீழ் அந்த சுய உதவி குழுக்களுக்கு 1 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும்.

பெண்கள் மேம்பாட்டுக்கு தனித்திட்டம் புதிதாக உருவாக்கப்படும், அனைத்து துறைகளிலும் பெண்கள் வழிநடத்தும் திட்டங்கள் கொண்டு வரப்படும்.

நாட்டின் வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பு அவசியமானது. தற்போது நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் ஆண் வாக்காளர்களுக்கு இணையாக, பெண் வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com