121 போலீஸ் அதிகாரிகளுக்கு உள்துறை மந்திரி பதக்கம்

121 போலீஸ் அதிகாரிகளுக்கு உள்துறை மந்திரி பதக்கம் வழங்கப்பட உள்ளது.
121 போலீஸ் அதிகாரிகளுக்கு உள்துறை மந்திரி பதக்கம்
Published on

புதுடெல்லி,

குற்ற புலன் விசாரணை தரத்தை மேம்படுத்தவும், விசாரணையில் திறம்பட செயல்படும் போலீஸ் அதிகாரிகளை அங்கீகரிக்கவும், சீர்மிகு விசாரணைக்கான மத்திய உள்துறை மந்திரி பதக்கம் கடந்த 2018-ம் ஆண்டு நிறுவப்பட்டது.

நடப்பு ஆண்டுக்கான இந்த பதக்கத்துக்கு 121 போலீஸ் அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் சி.பி.ஐ.யை சேர்ந்த 15 பேரும், மத்திய பிரதேச போலீஸ், மராட்டிய மாநில போலீஸ் ஆகியவற்றை சேர்ந்த தலா 10 பேரும், உத்தரபிரதேச போலீசை சேர்ந்த 8 பேரும், கேரளா, மேற்கு வங்காள மாநில காவல்துறைகளை சேர்ந்த தலா 7 பேரும் அடங்குவர். 121 போலீஸ் அதிகாரிகளில் 21 பேர் பெண்கள் ஆவர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com