

புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா பரவலை தொடர்ந்து கடந்த ஆண்டு மார்ச் 23-ந்தேதி முதல் சர்வதேச விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. அதேநேரம் வந்தே பாரத் திட்டம் உள்ளிட்ட நடவடிக்கைகளின் கீழ் குறிப்பிட்ட நாடுகளுக்கு கடந்த ஜூலை முதல் சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் நாடு முழுவதும் கொரோனாவின் 2-வது அலை தீவிரமடைந்து வருவதால் சர்வதேச விமானப்போக்குவரத்து தடையை மத்திய அரசு நீட்டித்து வருகிறது.
அதன்படி சர்வதேச விமான போக்குவரத்து தடை அடுத்த மாதம் (ஜூன்) 30-ந்தேதி வரை நீட்டிக்கப்படுவதாக சிவில் விமான போக்குவரத்து இயக்குனர் ஜெனரல் (டி.ஜி.சி.ஏ.) நேற்று அறிவித்து உள்ளார். எனினும் குறிப்பிட்ட சில வழித்தடங்களில் சிறப்பு விமான போக்குவரத்து அனுமதிக்கப்படுவதாகவும் டி.ஜி.சி.ஏ. வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. அதேநேரம் சர்வதேச அளவில் நடைபெற்று வரும் சரக்கு விமான போக்குவரத்தை இந்த தடை பாதிக்காது எனவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.