சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு செயல்பாடு நிறுத்தம்

சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான ஆம்னஸ்டி இன்டர்நேஷனலின் இந்திய அமைப்பு தனது நடவடிக்கைகளை நிறுத்துவதாக நேற்று அறிவித்தது.
சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு செயல்பாடு நிறுத்தம்
Published on

புதுடெல்லி,

சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான ஆம்னஸ்டி இன்டர்நேஷனலின் இந்திய அமைப்பும், அதனோடு தொடர்புடைய ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் இந்தியா என்ற தனியார் நிறுவனமும் சந்தேகத்துக்கு இடமான வகையில் ஏற்றுமதி சேவை வருமானமாக ரூ.51 கோடி பெற்றதாக தெரிய வந்தது.

அவற்றின் மீது சட்ட விரோத பண பரிமாற்ற தடுப்பு சட்டம் (பி.எம்.எல்.ஏ.) மற்றும் அன்னியச்செலாவணி மேலாண்மை சட்டம் (பெமா) ஆகியவற்றின் கீழ் அமலாக்கத்துறை விசாரணை தொடங்கியது.

அதில், ரூ.51 கோடி வருமானம் தொடர்பாக எந்த சேவையும் ஏற்றுமதி செய்யப்படவில்லை என தெரிய வந்தது. இதையடுத்து அவற்றின் வங்கி டெபாசிட்டுகள் முடக்கப்பட்டன.

இதனால் ஆம்னஸ்டி இன்டர்நேஷனலின் இந்திய அமைப்பு, நாட்டில் தனது நடவடிக்கைகளை நிறுத்துவதாக நேற்று அறிவித்தது.

இந்த நிலையில் அந்த அமைப்பு மீது மத்திய அமலாக்கத்துறை விசாரணை தொடராது எனவும், தனியார் நிறுவனம் மீது மட்டுமே விசாரணை தொடரும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com