நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகாவில் அதிக இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெறும் மந்திரி சந்தோஷ் லாட் பேட்டி

நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகாவில் அதிக இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்று மந்திரி சந்தோஷ் லாட் பேட்டியளித்தார்.
நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகாவில் அதிக இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெறும் மந்திரி சந்தோஷ் லாட் பேட்டி
Published on

உப்பள்ளி:-

தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக தொழிலாளர் நலத்துறை மந்திரி சந்தோஷ் லாட் வந்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளிக்கையில், கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி டபுள் டக்கர் பஸ் போல் உள்ளது. யார் வேண்டுமானாலும் காங்கிரஸ் கட்சிக்கு வரலாம்.

தார்வாரில் உள்ள பா.ஜனதா முக்கிய பிரமுகர்கள் காங்கிரஸ் கட்சியில் விரைவில் இணைவார்கள். அவர்கள் யார் என்பது விரைவில் தெரியவரும். கர்நாடகத்தில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு சிறப்பாக ஆட்சியை நடத்தி வருகிறது. முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் காங்கிரசில் இணைந்ததால் சங்கர் பட்டீல் அதிருப்தியில் இருந்து வருகிறார்.

அவர் நவலகுந்து தொகுதியில் தோல்வி அடைந்ததற்கு காரணம் ஜெகதீஷ் ஷெட்டர் தான். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகத்தில் அதிக இடங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும். மேலும் மத்தியில் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்கும். அதற்கு காங்கிரஸ் தொண்டர்கள் அனைவரும் அயராது உழைக்க வேண்டும் என்றார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com