கொரோனாவுக்கு எதிரான போர்; சுகாதார பணியாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் திருத்த மசோதா அறிமுகம்

கொரோனாவுக்கு எதிரான போரில் பணியாற்றும் சுகாதார பணியாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் திருத்த மசோதா நாடாளுமன்ற மேலவையில் இன்று அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
கொரோனாவுக்கு எதிரான போர்; சுகாதார பணியாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் திருத்த மசோதா அறிமுகம்
Published on

புதுடெல்லி,

நாடு முழுவதும் கொரோனா பரவலை தொடர்ந்து ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு முடங்கி போயினர். ஆனால், கொரோனாவுக்கு எதிரான போரில் முன்கள பணியாளர்களாக மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் உள்ளிட்டோர் துணிந்து செயல்பட்டு வருகின்றனர்.

எனினும், மருத்துவர்கள் மீது நோயாளிகளின் உறவினர்கள் தாக்குதல் நடத்துவது உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன. இதனை தடுக்கும் வகையில், அவர்களது சேவைக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் மற்றும் அவர்களை பாதுகாக்கும் வகையில் அவசர மசோதா ஒன்று அரசால் கொண்டு வரப்பட்டது.

இந்த நிலையில், நாடாளுமன்ற மேலவை தலைவர் வெங்கய்யா நாயுடு தலைமையில் அவை இன்று கூடியது. இதில், சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்பட்டு, சுகாதார விதிகள் பின்பற்றப்பட்டன. இதன்பின்னர் நடந்த நாடாளுமன்ற மேலவை கூட்டத்தில், இந்த மசோதாவுக்கு மாற்றாக, மத்திய சுகாதார மந்திரி ஹர்ச வர்தன் தொற்று நோய் (திருத்த) மசோதா 2020ஐ இன்று அறிமுகப்படுத்தி உள்ளார்.

இதற்கு ஒப்புதல் வழங்கப்படும் நிலையில், சுகாதார பணியாளர்களை பாதுகாக்கும் வகையில் சட்டம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.

இதேபோன்று, ஓமியோபதி மத்திய கவுன்சில் (திருத்த) மசோதா 2020 மற்றும் இந்திய மருத்துவம் மத்திய கவுன்சில் (திருத்த) மசோதா 2020 ஆகியவற்றையும் மத்திய மந்திரி வர்தன் அறிமுகப்படுத்தினார்.

தொடர்ந்து அவையின் பரிசீலனைக்காக விமான (திருத்த) மசோதா 2020ஐ மத்திய விமான போக்குவரத்து மந்திரி ஹர்தீப் சிங் பூரி இன்று அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com