வீட்டில் இருந்த இன்வெர்ட்டர் பேட்டரி வெடித்ததில் ஒருவர் உயிரிழப்பு

கோப்புப்படம்
உத்தரப்பிரதேசம் மாநிலம் அமேதியில் வீட்டில் இருந்த இன்வெர்ட்டர் பேட்டரி வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார்.
உத்தரப்பிரதேசம் மாநிலம் அமேதி மாவட்டத்தில் உள்ள மர்தௌலி கிராமத்தைச் சேர்ந்தவர் நவுரங் பகதூர் சிங் (62 வயது). இவரது மனைவி அனுசுயா சிங் (60 வயது). இன்று காலையில் இவரது வீட்டில் உள்ள இன்வெர்ட்டர் பேட்டரி திடீரென வெடித்தது. இதில் நவுரங் பகதூர் சிங் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் இந்த விபத்தில் வரது மனைவி படுகாயமடைந்தார். பக்கத்தினர் அவரை மீட்டு அமேதி சமூக சுகாதார மையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததால் மருத்துவர்கள் அவரை கௌரிகஞ்சில் உள்ள மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் நவுரங் பகதூர் சிங்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story