லஞ்ச புகார் கூறி கவர்னருக்கு கடிதம் எழுதியது குறித்து விசாரணை; விவசாயத்துறை மந்திரி செலுவராயசாமி பேட்டி

லஞ்ச புகார் கூறி கவர்னருக்கு கடிதம் எழுதியது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று விவசாயத்துறை மந்திரி செலுவராயசாமி கூறினார்.
லஞ்ச புகார் கூறி கவர்னருக்கு கடிதம் எழுதியது குறித்து விசாரணை; விவசாயத்துறை மந்திரி செலுவராயசாமி பேட்டி
Published on

பெங்களூரு:

விவசாயத்துறை மந்திரி செலுவராயசாமி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

எனக்கு எதிராக லஞ்ச புகார் கூறி கவர்னருக்கு சிலர் கடிதம் எழுதியுள்ளதாக ஒரு கடிதம் வெளியாகியுள்ளது. இதை விவசாயத்துறை இயக்குனர் மறுத்துள்ளார். விவசாயத்துறையில் மந்திரிக்கு எதிராக புகார் கூறி கவர்னருக்கு கடிதம் எழுதும் அதிகாரிகள் இல்லை. அந்த கடிதத்தின் உண்மை தன்மை குறித்து தெரிய வேண்டும் என்பதற்காக அதுபற்றி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன். ஒருவேளை எனது துறையில் யாராவது தவறு செய்திருந்தால் அதுபற்றி விசாரணை நடத்தப்படும்.

மண்டியா மாவட்டத்தில் எனது துறை இணை இயக்குனர் யாரிடமும் பேசவில்லை. விவசாயத்துறையில் உதவி இயக்குனர்கள் யாரையும் நான் சந்திக்கவில்லை. சிலர் சாப்பிடாமல் கூட எனக்கு எதிராக சதி செய்து வருகிறார்கள். அதை பற்றி நான் கவலைப்படவில்லை. எனது பணியை நான் செய்கிறேன்.

இவ்வாறு செலுவராயசாமி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com