அடுத்த ஆண்டு அசாமில் முதலீட்டாளர் உச்சி மாநாடு; பிரதமர் மோடி பங்கேற்பு

அசாமில் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெறும் முதலீட்டாளர் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.
அடுத்த ஆண்டு அசாமில் முதலீட்டாளர் உச்சி மாநாடு; பிரதமர் மோடி பங்கேற்பு
Published on

புதுடெல்லி,

அசாமின் கவுகாத்தி நகரில் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் 24 மற்றும் 25 ஆகிய நாட்களில் அசாம் முதலீட்டாளர் மற்றும் உட்கட்டமைப்பு உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதில், பங்கேற்க வருகை தரும்படி பிரதமர் மோடியை நேரில் சந்தித்து அசாம் முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா நேற்று அழைப்பு விடுத்து உள்ளார்.

பிரதமர் மோடியுடன் நாடாளுமன்ற இல்லத்தில் நடந்த சந்திப்பின்போது, முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா சார்பில் இந்த அழைப்பு விடப்பட்டது. இதேபோன்று மெகா ஜுமுர் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும்படியும் அவருக்கு அழைப்பு விடப்பட்டது.

இந்த 2 நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள பிரதமர் மோடி உடனே ஒப்பு கொண்டு விட்டார் என அதுபற்றி நேற்று வெளியான அறிக்கை தெரிவிக்கின்றது. இருவரிடையே 25 நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்பில், அசாமில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சி திட்ட பணிகள் பற்றி ஹிமந்த பிஸ்வா, பிரதமரிடம் விளக்கினார். அவர், பல்வேறு முன்னேற்ற விசயங்களுக்கான வழிகாட்டுதல்களை பிரதமரிடம் இருந்து கேட்டு பெற்றுள்ளார் என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com