ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கு: ப.சிதம்பரத்தின் தனிச்செயலாளருக்கு மீண்டும் சம்மன் - அமலாக்கத்துறை அனுப்பியது

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில், ப.சிதம்பரத்தின் தனிச்செயலாளருக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியது.
ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கு: ப.சிதம்பரத்தின் தனிச்செயலாளருக்கு மீண்டும் சம்மன் - அமலாக்கத்துறை அனுப்பியது
Published on

புதுடெல்லி,

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் கைதான முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இவர் மத்திய நிதி மந்திரியாக இருந்தபோது அவரது கூடுதல் தனிச்செயலாளராக பணிபுரிந்தவர் டெல்லியைச் சேர்ந்த கே.வி.கே.பெருமாள். ஐ.என்.எஸ். மீடியா வழக்கு தொடர்பாக இவரையும் சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரித்து உள்ளனர்.

இந்த நிலையில் நாளை (புதன்கிழமை) மீண்டும் விசாரணைக்கு ஆஜராகுமாறு கே.வி.கே.பெருமாளுக்கு அமலாக்கத்துறை நேற்று சம்மன் அனுப்பியது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com