ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: ப.சிதம்பரத்தை கைது செய்ய விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய விதிக்கப்பட்டு இருந்த தடையை டெல்லி ஐகோர்ட் நீட்டித்துள்ளது. #INXMediacase #Chidambaram
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: ப.சிதம்பரத்தை கைது செய்ய விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு
Published on

புதுடெல்லி,

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முதல் ஆட்சிக்காலத்தில் ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு அன்னிய முதலீட்டை பெற அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது.

இது தொடர்பாக அப்போதைய நிதி மந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டவர்கள் மீது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த விவகாரத்தில் அவர் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் உள்ளார். இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு வருமாறு ப.சிதம்பரத்துக்கும் சி.பி.ஐ. சம்மன் அனுப்பி இருந்தது.

இதைத்தொடர்ந்து டெல்லி ஐகோர்ட்டில் அவர் முன்ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ஆகஸ்ட் 1 ஆம் தேதி, சிதம்பரத்தை கைது செய்ய தடை விதித்து உத்தரவிட்டு இருந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கு, இன்று மீண்டும் விசாரணை வந்தது. அப்போது, அப்போது, வரும் செப்டம்பர் 28 ஆம் தேதி வரை ப சிதம்பரத்தை கைது செய்ய தடை விதித்து டெல்லி ஐகோர்ட் உத்தரவிட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com