புனேவில் ரூ.65 லட்சம் மதிப்பிலான ஐபோன்கள் திருட்டு - ஒருவர் கைது

ஐபோன்களை திருடியது தொடர்பாக குர்ஷித் ஷேக் என்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
புனேவில் ரூ.65 லட்சம் மதிப்பிலான ஐபோன்கள் திருட்டு - ஒருவர் கைது
Published on

மும்பை,

மராட்டிய மாநிலம் புனே மாவட்டத்தில் உள்ள வகோலி பகுதியில் உள்ள சேமிப்பு கிடங்கில், கடந்த ஜூலை 15-ந்தேதி ரூ.65 லட்சம் மதிப்பிலான 105 ஐபோன்கள் திருடப்பட்டன. இது சம்பந்தமாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் ஐபோன்களை திருடியது தொடர்பாக குர்ஷித் ஷேக் என்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர். ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த குர்ஷித் ஷேக், புனேவில் உள்ள சேமிப்பு கிடங்கிற்குள் நுழைந்து ஐபோன்களை திருடிச் சென்றது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட நபரிடம் புனே மாவட்ட போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com