ஐ.பி.எல். சூதாட்டம்; 8 பேர் கொண்ட கும்பல் கைது

ஐ.பி.எல். சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்து மொபைல் போன்கள், பணம் போன்றவற்றை பறிமுதல் செய்தனர்.
ஐ.பி.எல். சூதாட்டம்; 8 பேர் கொண்ட கும்பல் கைது
Published on

இந்தூர்,

13வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. இந்நிலையில், நேற்று நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி மீது மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரில் உள்ள விஜய்வர்கியா நகர் என்ற பகுதியில் சூதாட்டம் நடந்துள்ளது.

இதுபற்றி தகவல் அறிந்த இந்தூர் நகர பத்கங்கா காவல் நிலைய போலீசார் சம்பவ பகுதிக்கு சென்று சோதனையிட்டனர். இதில், ஐ.பி.எல். போட்டிகளின் மீது சூதாட்டம் நடைபெற்றது தெரிய வந்தது.

இதனையடுத்து, சூரஜ், ராகுல், நிலேஷ், யோகேஷ், விஷால், ராகுல், சந்தீப் மற்றும் சுபம் ஆகிய 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 8 மொபைல் போன்கள், தொலைக்காட்சி பெட்டி, ரூ.8 ஆயிரம் பணம் மற்றும் கணக்கில் இருந்த ரூ.3 லட்சம் பணம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். இதுபற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com