சிபிஐ இயக்குநராக பொறுப்பேற்றுக்கொண்டார் சுபோத் குமா ஜய்ஸ்வால்

சிபிஐ அமைப்புக்கு புதிய இயக்குநராக சுபோத் குமார் ஜெய்ஸ்வால் அடுத்த 2 ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
சிபிஐ இயக்குநராக பொறுப்பேற்றுக்கொண்டார் சுபோத் குமா ஜய்ஸ்வால்
Published on

புதுடெல்லி,

மத்திய தொழிற் பாதுகாப்புப்படையின் தலைவராக இருந்த சுபோத் குமார் ஜெய்ஸ்வாலை சிபிஐ அமைப்பின் இயக்குநராக அடுத்த இரு ஆண்டுகளுக்கு நியமித்து மத்திய பணியாளர்பயிற்சித்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இதையடுத்து, மூத்த ஐபிஎஸ் அதிகாரியான சுபோத் குமா ஜய்ஸ்வால் சிபிஐ புதிய இயக்குநராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

1985-ஆம் ஆண்டு மகாராஷ்டிர பிரிவு ஐபிஎஸ் அதிகாரியான ஜய்ஸ்வால் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். பிரதமா நரேந்திர மோடி தலைமையில் 3 பேர் கொண்ட தோவுக் குழு இவரை நேற்று நியமனம் செய்தது.

கடந்த பிப்ரவரி 3-ம் தேதி சிபிஐ இயக்குநராக இருந்த ரிஷி குமார் சுக்லா ஓய்வு பெற்று சென்றபின் கடந்த 3 மாதங்களாக இயக்குநர் இல்லாமல் சிபிஐ அமைப்பு இயங்கி வந்தது. 1988-ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியான குஜராத் பிரிவு அதிகாரியான பிரவீண் சின்ஹா பொறுப்பு இயக்குநராக நியமிக்கப்பட்டு கடந்த 3 மாதங்களாக செயல்பட்டு வந்தார். இந்நிலையில் சிபிஐ அமைப்புக்கு புதிய இயக்குநராக சுபோத் குமார் ஜெய்ஸ்வால் அடுத்த 2 ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com