ஈரான் மோதல் விவகாரம்; ஓமன் வெளியுறவு மந்திரியுடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் பேச்சு

ஓமன் வெளியுறவு மந்திரி பத்ர அல்புசைதியுடன், மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் தொலைபேசி வழியே பேசியுள்ளார்.
ஈரான் மோதல் விவகாரம்; ஓமன் வெளியுறவு மந்திரியுடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் பேச்சு
Published on

புதுடெல்லி

ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக நேற்று கடுமையாக தாக்கியது. இந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என பலர் கொல்லப்பட்டு உள்ளனர். இந்த தாக்குதல் இன்றும் தொடர்ந்து வருகிறது. இதனால் மத்திய கிழக்கு பகுதியில் கடும் பதற்றம் காணப்படுகிறது.

ஈரானின் பாதுகாப்பு மந்திரி அமீர் நசீர்ஜடே மற்றும் புரட்சிகர காவல்படை தளபதி முகமது பாக்பூர் ஆகியோர் கொல்லப்பட்டனர். ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி, அவருடைய மகள், மருமகன் உள்ளிட்ட குடும்பத்தினரும் கொல்லப்பட்டு உள்ளனர். இதனை ஈரான் நாடும் உறுதி செய்துள்ளது.

Also Read
காமேனி படுகொலை; டெல்லியில் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணியாக சென்ற ஷியா சமூகத்தினர்
ஈரான் மோதல் விவகாரம்; ஓமன் வெளியுறவு மந்திரியுடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் பேச்சு

இந்த தொடக்க கட்ட தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட மூத்த ராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டு விட்டனர் என இஸ்ரேல் பாதுகாப்பு படை இன்று தகவல் தெரிவித்து உள்ளது. இந்த நிலையில், ஈரான் உச்ச தலைவர் காமேனி படுகொலை சர்வதேச சட்ட மீறல் ஆகும் என சீனா கண்டனம் தெரிவித்து உள்ளது.

இதேபோன்று ரஷியா, வடகொரியாவும் இதற்கு கண்டனம் தெரிவித்து உள்ளது. இந்நிலையில், இந்த விவகாரத்தில் ஓமன் வெளியுறவு மந்திரி பத்ர அல்புசைதியுடன், மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் தொலைபேசி வழியே பேசியுள்ளார். இதுபற்றி மந்திரி ஜெய்சங்கர் வெளியிட்ட செய்தியில், நடந்து வரும் மோதலில் அவருடைய திறனாய்வுகளையும் மற்றும் தெளிவான புரிதல்களையும் பாராட்டினேன் என தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com