ஈரான் ஹிஜாப் போராட்டத்திற்கு ஆதரவாக ஆடை அவிழ்ப்பு வீடியோ வெளியிட்ட பிரபல நடிகை

ஈரான் ஹிஜாப் போராட்டத்திற்கு ஆதரவாக நடிகை ஒருவர் தான் அணிந்திருந்த ஆடைகளை ஒவ்வொன்றாக கழட்டும் வீடியோவை வெளியிட்டு உள்ளார்.
ஈரான் ஹிஜாப் போராட்டத்திற்கு ஆதரவாக ஆடை அவிழ்ப்பு வீடியோ வெளியிட்ட பிரபல நடிகை
Published on

புதுடெல்லி:

இஸ்லாமிய மத சட்டங்களை கடுமையாக பின்பற்றி வரும் ஈரானில் பெண்கள் மற்றும் 9 வயதிற்கு மேற்பட்ட சிறுமிகள் இஸ்லாமிய மத உடையான ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, அந்நாட்டின் தெஹ்ரானில் ஹிஜாப் சரியாக அணியவில்லை என கூறி போலீசார் நடத்திய தாக்குதலில் கோமா நிலைக்கு சென்ற 22 வயதான மாஷா அமினி என்ற இளம்பெண் கடந்த மாதம் 17-ம் தேதி உயிரிழந்தார்.

ஹிஜாப் சரியாக அணியவில்லை என கூறு போலீசார் தாக்கியதில் இளம்பெண் மாஷா உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து ஈரான் முழுவதும் பெண்கள் போராட்டத்தில் குதித்தனர்.

ஹிஜாப்பை கழற்றி வீசியும், ஹிஜாப்பை தீ வைத்து எரித்தும் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டம் நாட்டின் பல நகரங்களுக்கு பரவி வருகிறது. ஹிஜாப் எதிர்ப்பு போராட்டக்காரர்களை ஒடுக்க ஈரான் அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஈரானில் சமூகவலைதளங்கள் முடக்கப்பட்டுள்ளன. மக்கள் கூட்டமாக கூடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஈரான் பெண்கள் நடத்தும் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்திற்கு உலகளவில் பிரபலங்கள் பலரும் தங்களின் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், ஈரான் நடிகை எல்னாஸ் நோரூசி 'ஆடை அவிழ்ப்பு' வீடியோ மூலம் தனது ஆதரவை பதிவு செய்துள்ளார்.

இதுகுறித்து எல்னாஸ் நோரூசி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிடும்போது, "பெண்கள் இந்த உலகில் எங்கிருந்தாலும், எங்கிருந்து வந்தாலும் அவள் விரும்பியதை எப்போதும், எங்கு வேண்டுமானாலும் அணிய உரிமை வேண்டும். எந்த ஆணுக்கும், பெண்ணுக்கும் அவளை விமர்சிக்கவோ, தீர்மானிக்கவோ அல்லது வேறுவிதமாக ஆடை அணியச் சொல்லவோ உரிமை இல்லை.

ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு கருத்துகள் மற்றும் நம்பிக்கைகள் உள்ளன. அவை மதிக்கப்பட வேண்டும். ஜனநாயகம் என்றால் முடிவெடுக்கும் அதிகாரம் என்பதே. ஒவ்வொரு பெண்ணுக்கும் தன் உடலைத் தீர்மானிக்கும் அதிகாரம் இருக்க வேண்டும். நான் இங்கு நிர்வாணத்தை விளம்பரப்படுத்தவில்லை, சுதந்திரத்தை ஊக்குவிக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

இந்தப் பதிவுடன் தான் அணிந்திருந்த ஆடைகளை ஒவ்வொன்றாக கழட்டும் வீடியோவையும் இணைத்துள்ளார். இதுவும் ஒரு துணிவுமிக்க போராட்ட வடிவம் என நெட்டிசன்கள் வரவேற்றுள்ளனர்.

ஈரானை சேர்ந்த எல்னாஸ் நோரூசி 10 ஆண்டுகளுக்கு மேலாக சர்வதேச அளவில் மாடலாக இருந்து வருகிறார். கதக் உள்ளிட்ட நடனங்களை இந்தியாவில் பயின்றிருக்கிறார். 2018-ஆம் ஆண்டு நெட்பிளக்ஸில் வெளியான 'சாக்ரெட் கேம்' (sacred games) தொடரிலும் எல்னாஸ் நோரூசி நடித்து உள்ளார்.

View this post on Instagram

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com