ஈரான் - அமெரிக்கா போர்: பெங்களூருவில் 34 விமானங்கள் ரத்து

அரபு நாடுகளுக்கு செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
ஈரான் - அமெரிக்கா போர்: பெங்களூருவில் 34 விமானங்கள் ரத்து
Published on

பெங்களூரு,

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு பதிலடியாக ஐக்கிய அரபு அமீரகம், குவைத் உள்ளிட்ட அரபு நாடு களில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் அரபு நாடுகளில் விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டு உள்ளன. இதையடுத்து இந்தியாவில் இருந்து அரபு நாடுக ளுக்கு செல்லும் விமானங்கள் நேற்றும் ரத்து செய்யப்பட்டன.

இதுபோல் பெங்களூரு புறநகர் தேவனஹள்ளியில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 4 நாட்களாக விமானங்கள் ரத்து செய்யப் பட்டு வருகிறது. அதன்படி 5-வது நாளாக நேற்றும் பெங்களூருவில் இருந்து துபாய். அபுதாபி, ரியாத், தாமம், தோகா உள்ளிட்ட நகரங்களுக்கு செல்ல இருந்த 16 விமானங்களும், அந்த நகரில் இருந்து பெங்களூரு வுக்கு வரவேண்டிய 18 விமானங்களும் என மொத்தம் 34 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

இதையடுத்து பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தின் 2-வது முனை யத்தில் பயணிகளுக்கு தேவையான வசதிகள், குடிநீர், மருத்துவம், உட் கார இருக்கைகள், சக்கர நாற்காலிகள், செல்போன் சார்ஜிங் மையங்கள் போன்ற அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளன. அவர்க ளுக்காகவே அங்கு ஒரு உதவி மையம் தொடங்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com