மத்திய மந்திரி ஜெய்சங்கருடன் ஈரான் வெளியுறவு மந்திரி பேச்சு

மேற்கு ஆசியா பிரச்சினை தொடர்பாக இருவரும் ஆலோசித்துள்ளனர்.
மத்திய மந்திரி ஜெய்சங்கருடன் ஈரான் வெளியுறவு மந்திரி பேச்சு
Published on

ஈரான் - அமெரிக்கா இடையே போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட்டாலும், மேற்கு ஆசியா பிராந்தியம் முழுவதும் பதற்றம் நீடித்து வருகிறது. அங்கு அமைதியை உறுதி செய்வதற்காக ஈரான் வெளியுறவு மந்திரி அப்பாஸ் அராக்சி, பல்வேறு நாடுகளுடன் பேசி வருகிறார். அந்தவகையில் மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கருடன் நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது மேற்கு ஆசியா பிரச்சினை தொடர்பாக பல்வேறு அம்சங் கள் குறித்து இருவரும் விவாதித்தனர்.

இது குறித்து ஜெய்சங்கர் பின்னர் தனது சமூக வலைத்தளத் தில், 'ஈரான் வெளியுறவு மந்திரி அப்பாஸ் அராக்சியிடம் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. தற்போதைய சூழ்நிலையின் பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவாக உரையாடினோம். தொடர்ந்து நெருங்கிய தொடர்பில் இருக்கவும் நாங்கள் ஒப்புக் கொண்டோம்' என குறிப்பிட்டு இருந்தார். முன்னதாக பாகிஸ்தான், ஓமன் மற்றும் ரஷியா போன்ற நாடுக ளுக்கு பயணம் செய்திருந்த அராக்சி, அந்த நாட்டு தலைவர்க ளுடனும் வளைகுடா பதற்றம் தொடர்பாக ஆலோசித்து இருந் தது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com