டெல்லி ஐகோர்ட்டில் இரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

டெல்லி ஐகோர்ட்டில், இரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
டெல்லி ஐகோர்ட்டில் இரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
Published on

புதுடெல்லி,

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஒருங்கிணைந்த அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கீடு செய்து தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து சசிகலா, டி.டி.வி.தினகரன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை டெல்லி ஐகோர்ட்டில், நீதிபதிகள் ஜி.எஸ்.சிஸ்தானி, சங்கீதா திங்ரா சேகல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இரு நீதிபதிகளில் ஒருவர் வராததால் வழக்கு, வரும் 16-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com