

ஸ்ரீநகர்,
காஷ்மீர் மாநில சிறப்பு போலீஸ்படை அதிகாரி இர்பான் அகமது கடந்த செவ்வாய் கிழமை மாலையில் ஏகே 47 ரக துப்பாக்கியுடன் மாயமாகினார். அவரை தேடும் பணியை பாதுகாப்பு படைகள் தொடங்கியது. அவர் எங்கிருக்கிறார் என்பது தெரியாத நிலையில், ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத இயக்கம் எங்களுடைய இயக்கத்துடன் இணைந்துவிட்டார் என தகவல் வெளியிட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநில போலீசார் அனைவரும் தங்களுடைய பணியை விட்டுவிட்டு பயங்கரவாத இயக்கத்தில் இணைய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது. பயங்கரவாதிகள் போலீசாரை வீட்டு புகுந்து வேலையை விட்டுவிடுமாறு மிரட்டும் சம்பவமும் நடக்கிறது.
இதற்கிடையே சோபூர் பகுதியில் இருந்து 4 பயங்கரவாதிகளை ஜம்மு காஷ்மீர் போலீஸ் கைது செய்து விசாரித்து வருகிறது.