

புதுடெல்லி,
சிரிய அரபுக் குடியரசின் அடுத்த இந்தியத் தூதராக டாக்டர் இர்ஷாத் அகமது நியமனம் செய்யப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதன்படி மஸ்கட்டில் உள்ள இந்தியத் தூதரகத்தில் தற்போது ஆலோசகராக உள்ள டாக்டர் இர்ஷாத் அகமது, சிரிய அரபுக் குடியரசின் அடுத்த இந்தியத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் அவர் விரைவில் பணியை ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.