அலகாபாத் பெயர் மாற்றமா?

அலகாபாத் மாட்டத்தின் பெயர் மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. #Allahabad
அலகாபாத் பெயர் மாற்றமா?
Published on

அலகாபாத்,

உத்தர பிரதேச மாவட்டத்தின் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசாங்கம் அலகாபாத் மாவட்டத்தின் பெயரை, 'பிரயக்ராஜ்' என மாற்ற திட்டமிட்டு உள்ளது. இது சம்பந்தமாக அடுத்த வருடம் நடைபெற இருக்கும் கும்பமேளாவிற்கு முன்னதாக முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அலகாபாத் மாவட்டத்தில், கங்கை, யமுனா, சரஸ்வதி ஆகிய முக்கிய நதிகள் ஒரே இடத்தில் சங்கமிக்கும் புகழ்பெற்ற புனித தலமாக 'பிரயக்' இருந்து வருகிறது. மேலும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகா கும்பமேளா நடைபெறும் புனிதத்தலமாகவும் அறியப்படுகிறது.

அலகாபாத் மாவட்டத்தின் பெயரை, பிரயக்ராஜ் என மாற்றுவதற்கு மாநில அரசு மாற்ற திட்டமிட்டுள்ளதாக உத்திர பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுர்யா தெரிவித்துள்ளார்.

மேலும் 2019-ம் ஆண்டு நடக்கவிருக்கும் கும்பமேளாவின் போது வைக்கப்பட உள்ள பதாகைகளில் அலகாபாத்திற்குப் பதிலாக பிரயக்ராஜ் என அச்சடிக்கபட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com