காஷ்மீரில் பிறந்த ஐ.எஸ். ஆள்சேர்ப்பு பிரிவு தலைவரை பயங்கரவாதியாக அறிவித்தது இந்தியா

காஷ்மீரில் பிறந்த ஐ.எஸ். ஆள்சேர்ப்பு பிரிவு தலைவர் அகமது அஹாங்கர் இந்தியாவால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டு உள்ளார்.
காஷ்மீரில் பிறந்த ஐ.எஸ். ஆள்சேர்ப்பு பிரிவு தலைவரை பயங்கரவாதியாக அறிவித்தது இந்தியா
Published on

ஸ்ரீநகர்,

அல்-கொய்தா மற்றும் பிற சர்வதேச பயங்கரவாத குழுக்களுடன் தொடர்பில் ஈடுபட்டு உள்ளவர் அகமது அஹாங்கர் என்ற அபு உஸ்மான் அல்-காஷ்மீரி. ஆப்கானிஸ்தான் நாட்டில் தற்போது உள்ள அவர், ஜம்மு மற்றும் காஷ்மீரின் ஸ்ரீநகரில் 1974-ம் ஆண்டு பிறந்தவர்.

இந்தியாவில் காஷ்மீரில் உள்ள இளைஞர்கள் உள்பட பலரை ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் சேர்க்கும் பணியில் அவர் ஈடுபட்டு வந்தது தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், சட்டவிரோத செயல்கள் (தடுப்பு) சட்டம், 1967-ன் கீழ் பயங்கரவாதத்துடன் தொடர்புடைய அகமது அஹாங்கர் என்ற அபு உஸ்மான் அல்-காஷ்மீரி என்பவர் பயங்கரவாதிகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளார் என தெரிவித்து உள்ளது.

இந்தியாவில் உள்ளவர்களை ஐ.எஸ். அமைப்பில் சேர்க்கும் பணிக்கான தலைவராக இவர் நியமிக்கப்பட்டார். இந்தியாவை மையம் ஆக கொண்டு, ஆன்லைன் வழியேயான ஐ.எஸ்.ஐ.எஸ். பிரசார பணிக்கான வேலைகளில் அவர் ஈடுபட்டு வந்துள்ளார் என அறிக்கை தெரிவிக்கின்றது.

இவரை 2 தசாப்தங்களுக்கும் கூடுதலாக தேடப்படும் பயங்கரவாதியாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்து இருந்தது. சட்டவிரோத வகையில், இவரது ஐ.எஸ். அமைப்புக்காக காஷ்மீரில் உள்ள தேவையான நபர்களை உள்ளே இழுக்கும் வேலையை அவர் திறம்பட மேற்கொண்டு வந்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com