தோல்விகளை மறக்க இந்தி திணிப்பு என்பதா? - மு.க.ஸ்டாலின் பதிவுக்கு தர்மேந்திர பிரதான் பதில்

அனைத்து இந்திய மொழிகளையும் வலுப்படுத்தும் தேசிய முயற்சியில் இணைவது அவசியம் என தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.
தோல்விகளை மறக்க இந்தி திணிப்பு என்பதா? - மு.க.ஸ்டாலின் பதிவுக்கு தர்மேந்திர பிரதான் பதில்
Published on

புதுடெல்லி,

2026-27 ஆம் கல்வியாண்டில் இருந்து பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் மும்மொழிக் கொள்கை நடைமுறைப்படுத்தப்படும் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த முன்னெடுப்புக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், தோல்விகளை மறக்க இந்தி திணிப்பு என்பதா? என மு.க.ஸ்டாலின் பதிவுக்கு தர்மேந்திர பிரதான் பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:-

அரசியல் தோல்விகளை மறைக்க இந்தி திணிப்பு என்ற வார்த்தை பயன்படுத்துவது சலிப்பூட்டுகிறது.

தோல்விகளை மறைக்க இந்தி திணிப்பு என்பதா? கூடுதல் மொழிகளை கற்றுக்கொள்வதால் தமிழ் பலவீனமடைவதில்லை; மாறாக, அதைப் பேசுபவர்கள் தன்னம்பிக்கை பெறுவர்.

புதிய கல்விக் கொள்கை அரசியலமைப்பு சட்டத்தை மதித்து அனைத்து மொழிகளுக்கும் சமமான முக்கியத்துவம் அளிக்கிறது. அனைத்து இந்திய மொழிகளையும் வலுப்படுத்தும் தேசிய முயற்சியில் இணைவது அவசியம் என அதில் பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com