

புதுடெல்லி,
இந்தியாவின் மக்கள் தொகை 150 கோடியை நெருங்கி வருவதாக உலா வரும் எய்ம்ஸ் டிஜிட்டல் விளம்பர பலகை வைரலாகி இருக்கிறது.
டெல்லி எய்ம்ஸ் சார்பில் இந்தியாவின் நிகழ்நேர மக்கள் தொகையை குறிப்பிடுவதாக கூறப்படும் டிஜிட்டல் விளம்பர பலகை ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தற்போதைய இந்திய மக்கள் தொகை 148 கோடியை கடந்துள்ளதாக அந்த அறிவிப்பு பலகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது தான் அதற்கு காரணம். இந்த கணக்கீட்டின் தரவுகளுக்கான ஆதாரம் என்ன?, எதன் அடிப்படையில் இந்த கணக்கீடு செய்யப்படுகிறது?, இது உண்மையான மக்கள் தொகையை குறிக்கிறதா? என சமூக வலைதளங்களில் பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோவின் படி, நவம் பர் 10-ந் தேதி இரவு 7.27 மணியளவில் இந்தியாவின் மக்கள் தொகை 148 கோடியே 16 லட்சத்து 37 ஆயிரத்து 145 ஆக இருக்கிறது. இந்த எண்ணிக்கை ஐக்கிய நாடுகள் சபையின் தரவுகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட மக்கள் தொகை மதிப்பீடுகளுடன் பெருமளவில் ஒத்துப்போவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
அதேவேளையில், இந்த விளம்பர பலகை உண்மையான நேரத்தில் பிறப்பு மற்றும் இறப்புகளை கண்காணிக்கும் அமைப்பு அல்ல என்றும், இது மக்கள் தொகையை மதிப்பிடும் ஒரு கணிப்பு கருவி என்றும் செயற்கை நுண்ணறிவு தெரிவித்திருப்பதாக சமூகவலைதளப்பதிவு ஒன்று கூறுகிறது.
அதாவது, ஒவ்வொரு பிறப்பு மற்றும் இறப்பையும் அவை நிகழும் நேரத்திலேயே பதிவு செய்வதற்கு பதிலாக, சராசரி மக்கள் தொகை வளர்ச்சி விகிதங்களின் அடிப்படையில் கணக்கிட்டு, மதிப்பிடப்பட்ட மக்கள் தொகை எண்ணிக்கையை தொடர்ந்து புதுப்பிக்கும் வகையில் இந்த கருவி செயல்படுவதாக கூறப்படுகிறது.
எது எப்படியோ...தற்போது இந்த விளம்பர பலகை பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. மொத்த மக்கள் தொகையில் சீனா தான் முதலிடத்தில் இருந்தது. கடந்த 2023-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், இதை முறிய டித்து இந்தியா முதலிடத்தை பிடித்து சீனாவை 2-வது இடத் துக்கு தள்ளியது. தற்போது சீனாவின் மக்கள் தொகை 141 கோடியாக இருக் கிறது. அதேவேளையில், 3-வது இடத்தில் இருக்கும் அமெரிக்கா வெறும் 35 கோடி மக்கள் தொகையை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.