

பனாஜி,
கடந்த 15-ந் தேதி, நியூசிலாந்து நாட்டில் 2 மசூதிகளில் நடந்த துப்பாக்கி சூட்டில் சுமார் 50 பேர் பலியானார்கள். இதற்கு பழி வாங்குவதற்காக, கோவா மாநிலத்துக்கு வந்துள்ள இஸ்ரேல் நாட்டு சுற்றுலா பயணிகளை தாக்க பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக மத்திய உளவு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
இதனால், கோவா மாநிலத்தில் சுற்றுலா பயணியரிடையே பீதி ஏற்பட்டுள்ளது. போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர். இஸ்ரேல் நாட்டினர் அதிகமாக நடமாடும் இடங்களை சுற்றிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது.