கடவுள் ராமர் பா.ஜ.க.வில் உறுப்பினராகி விட்டாரா? காங்கிரஸ் எம்.எல்.சி. கேள்வி


கடவுள் ராமர் பா.ஜ.க.வில் உறுப்பினராகி விட்டாரா? காங்கிரஸ் எம்.எல்.சி. கேள்வி
x

அமைதியான சூழலை சீர்குலைக்கும் வகையில், மதத்தின் பெயரால் பா.ஜ.க. வாக்குகளை கோரி வருகின்றனர் என கூறினார்.

நிசாமாபாத்,

தெலுங்கானாவில் முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி தலைமையில் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. இந்நிலையில், நிசாமாபாத் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்.எல்.சி. பொம்மா மகேஷ் குமார் கவுட், அரசியல் லாபங்களுக்காக பா.ஜ.க. மத உணர்வுகளை தூண்டி விடுகிறது என குற்றச்சாட்டாக கூறினார்.

அவர் கூறும்போது, பா.ஜ.க. சாதி மற்றும் மதம் சார்ந்த அரசியல் விளையாட்டில் ஈடுபட்டு கொண்டிருக்கிறது. கடவுள் ராமர் பா.ஜ.க.வில் உறுப்பினராகி விட்டாரா என்ன? அவர்கள் அரசியல் லாபங்களுக்காக மத உணர்வுகளை தூண்டி விட்டு கொண்டு இருக்கின்றனர் என்றார்.

ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பும், உண்மையில் மக்கள் எதிர்கொள்கிற பிரச்சனைகளில் கவனம் செலுத்துவதற்கு பதிலாக, அமைதியான சூழலை சீர்குலைக்கும் வகையில், மதத்தின் பெயரால் அவர்கள் வாக்குகளை கோரி வருகின்றனர்.

இதுபோன்ற பிரிவினைவாத அரசியலை வாக்காளர்கள் நிராகரிக்க வேண்டும். வளர்ச்சி சார்ந்த அரசுக்கு அவர்கள் ஆதரவளிக்க வேண்டும் என்று கூறினார்.

1 More update

Next Story