ராணுவ அதிகாரிகள் புத்தகங்களை எழுதுவது குறித்த விதிகளை கடுமையாக்க மத்திய அரசு திட்டம்?

'போர் ஸ்டார்ஸ் ஆப் டெஸ் டினி' புத்தகம் இன்னும் பிரசுரிக்கப்படவில்லை என பெங்குவின்புத்தக பதிப்பகம் தெரிவித்துள்ளது.
ராணுவ அதிகாரிகள் புத்தகங்களை எழுதுவது குறித்த விதிகளை கடுமையாக்க மத்திய அரசு திட்டம்?
Published on

புதுடெல்லி,

சீன ராணுவ ஆக்கிரமிப்பு குறித்து முன்னாள் ராணுவ தளபதி எம்.எம்.நர வனே தனது சுயசரிதை புத்தகத்தில் எழுதி இருப்பதாக மக்களவை எதிர்க் கட்சி தலைவர் ராகுல்காந்தி மக்களவையில் சர்ச்சையை எழுப்பினார். ஆனால் அந்த புத்தகம் இன்னும் வெளியிடப்படவில்லை என்று மத்திய அரசு மறுத்தது.

இதற்கிடையே, புத்தகத்தின் கையெழுத்து பிரதிகளை சட்டவிரோதமாக புழக்கத்தில் விட்டதாக டெல்லி போலீசார் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து முன்னாள் ராணுவ தளபதி நரவனே எழுதிய 'போர் ஸ்டார்ஸ் ஆப் டெஸ் டினி' புத்தகத்தின் பிரத்யேக பதிப்புரிமையை நாங்கள் பெற்றுள்ளோம். அந்த புத்தகம் இன்னும் பிரசுரிக்கப்படவில்லை; அச்சு வடிவிலோ, டிஜிட்டல் வடிவிலோ எந்த பிரதியும் பொதுமக்களுக்கு வெளியிடப்படவில்லை என்று பெங்குவின் ரேண்டம் ஹவுஸ் இண்டியா புத்தக பதிப்பகம் திட்டவட்டமாக தெரிவித்தது.

எனவே, அச்சு வடிவிலோ, டிஜிட்டல் வடிவிலோ புத்தகத்தை முழுமையாகவோ, பகுதி அளவிலோ வெளியிட்டால், அது பதிப்பு ரிமையை மீறுவதாக அமையும். அத்தகைய நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அந்த பிரதிகள் பறிமுதல் செய்யப்படும் என்று பெங்குவின் ரேண்டம் தெரிவித்தது.

இந்த நிலையில், ஓய்வுபெற்ற மற்றும் பணியில் இருக்கும் ராணுவ அதிகாரிகள் புத்தகங்கள் எழுதுவது குறித்த விதிகளை கடுமையாக்க மத்திய அரசு புதிய விதிமுறைகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் ராணுவத் தளபதி நரவணேவின் சுயசரிதை புத்தகம் தொடர்பான சர்ச்சையைத் தொடர்ந்து, தற்போதுள்ள சேவை விதிகள் மற்றும் அதிகாரப்பூர்வ ரகசியங்கள் சட்டம் ஆகியவை உள்ளடக்கிய புதிய விதிகளை அரசு உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com