யமுனை ஆற்றில் விஷ கலப்பா...? சான்றுகளை தாக்கல் செய்ய கெஜ்ரிவாலுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு

கெஜ்ரிவால் கூறிய குற்றச்சாட்டுகளுக்கான உண்மையான சான்றுகளை நாளை இரவு 8 மணிக்குள் சமர்ப்பிக்கும்படி தலைமை தேர்தல் ஆணையம் கேட்டு கொண்டுள்ளது.
யமுனை ஆற்றில் விஷ கலப்பா...? சான்றுகளை தாக்கல் செய்ய கெஜ்ரிவாலுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
Published on

புதுடெல்லி,

பா.ஜ.க. ஆட்சி செய்து வரும் அரியானாவில் இருந்து யமுனை ஆற்றில் விஷம் கலக்கப்பட்டு உள்ளது என ஆம் ஆத்மியின் ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறினார். இந்நிலையில், பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் ஆகிய 2 கட்சிகளும், தீவிர பொய்யான குற்றச்சாட்டுகளை கூறும் கெஜ்ரிவாலுக்கு எதிராக நடவடிக்கை கோரி தலைமை தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தது.

கெஜ்ரிவால் கூறும்போது, யமுனை ஆற்றில் விஷம் கலக்கப்படுவதற்கு முன்பு டெல்லி நீர் வாரியத்தின் என்ஜினீயர்கள் சரியான தருணத்தில் கண்டறிந்து, தடுத்தனர். இல்லையெனில் இனப்படுகொலை எனும் அளவுக்கு அதிக அளவிலான மக்கள் கொல்லப்பட்டு இருப்பார்கள். நீருடன் விஷம் கலப்பதற்கு முன்பே அது தடுக்கப்பட்டது என கூறினார்.

இதனை தொடர்ந்து கெஜ்ரிவால் கூறிய குற்றச்சாட்டுகளுக்கான உண்மையான சான்றுகளை சமர்ப்பிக்கும்படி தலைமை தேர்தல் ஆணையம் அவரிடம் கேட்டு கொண்டுள்ளது. நாளை இரவு 8 மணிக்குள் இந்த புகாருக்கு பதிலளிக்கும் வகையில், உண்மையான மற்றும் சட்ட ரீதியிலான சான்றுகளை சமர்ப்பிக்கும்படியும் கேட்டு கொண்டது. இதனால், இந்த விவகாரம் பற்றி ஆய்வு செய்து, முறையான நடவடிக்கையை எடுக்க முடியும் என்றும் தெரிவித்தது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com