டெல்லியில் இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டு வெடிப்பு: அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு அதிகரிப்பு

டெல்லியில் இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் கடிதம் சிக்கி உள்ளது புலனாய்வாளர்கள் அதனை ஆய்வு நடத்தி வருகிறார்கள்.
டெல்லியில் இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டு வெடிப்பு: அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு அதிகரிப்பு
Published on

புதுடெல்லி

டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே ஜிண்டால் வீட்டின் அருகே 150 மீட்டர் தொலைவில் இன்று மாலை 5.05 மணியளவில் குறைந்த சக்தி கொண்ட குண்டு வெடித்தது. . இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில், ஒருவர் காயமடைந்துள்ளார், 4 கார்கள் சேதமடைந்ததாக தகவல் வெளியாகியள்ளது.

தகவலறிந்த டெல்லி போலீசார் அப்பகுதியில் உள்ள சாலைகளை மூடி உள்ளனர். தொடர்ந்து, குண்டுவெடித்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

புலனாய்வாளர்கள் அந்த இடத்திலிருந்து ஒரு கடிதத்தை கைப்பற்றி உள்ளனர். அதில் எழுதப்பட்டவை இஸ்ரேல் தூதரக அதிகாரிகளுடன் தொடர்புடையதா, இந்த சம்பவத்துடன் தொடர்புடையதா என்பதை புலனாய்வாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

இஸ்ரேலிய தூதரகம் அருகே நடந்த குண்டுவெடிப்பைத் தொடர்ந்து டெல்லி மற்றும் மும்பை விமான நிலையங்களில் உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எந்தவொரு அசம்பாவித சூழ்நிலையையும் தவிர்க்க அரசு கட்டிடங்கள், ரெயில் நிலையங்கள் மற்றும் பஸ் நிலையங்களில் மேம்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. மும்பையில் உள்ள இஸ்ரேல் துணைத் தூதரகத்தின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு உள்ளது.

இதனைத்தொடர்ந்து, மத்திய தொழில் பாதுகாப்பு படை வெளியிட்டுள்ள அறிவிப்பில்

அனைத்து விமான நிலையங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் முக்கிய இடங்களிலும் பாதுகாப்பு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.மேலும், தேவையான அளவு பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளது என கூறி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com