இஸ்ரேல்-ஈரான் மோதலால் வான்வெளி மூடல்; டெல்லி, மும்பையில் சர்வதேச விமான போக்குவரத்து பாதிப்பு


இஸ்ரேல்-ஈரான் மோதலால் வான்வெளி மூடல்; டெல்லி, மும்பையில் சர்வதேச விமான போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 14 Jun 2025 5:15 AM IST (Updated: 14 Jun 2025 5:15 AM IST)
t-max-icont-min-icon

நியூயார்க்கில் இருந்து மும்பை வந்த விமானம் ஜெட்டாவுக்கு திரும்பிப் போனது.

புதுடெல்லி,

ஈரான் மீது இஸ்ரேல் நேற்று தாக்குதல் நடத்தியது. இதன் காரணமாக ஈரான் நாடு தனது வான்வெளியை மூடியது. இது சர்வதேச விமான போக்குவரத்தை பாதித்தது. குறிப்பாக இந்தியாவில் இருந்து பல வெளிநாடுகளுக்கு சென்ற, அங்கிருந்து வந்த விமானங்கள் பாதிக்கப்பட்டன. இந்த விமானங்கள் பிற விமான நிலையங்களுக்கு மாற்றி விடப்பட்டன.

லண்டன் ஹீத்ரூவில் இருந்து மும்பை வந்த விமானம் வியன்னாவுக்கு திருப்பி விடப்பட்டது. நியூயார்க்கில் இருந்து டெல்லி வந்த விமானம் ஷார்ஜாவுக்கு திருப்பி விடப்பட்டது. நியூயார்க்கில் இருந்து மும்பை வந்த விமானம் ஜெட்டாவுக்கு திரும்பிப் போனது. இதுபோல லண்டன் ஹீத்ரோவில் இருந்து டெல்லி வந்த விமானம் மும்பைக்கும், வான்கூவரில் இருந்து டெல்லி வந்த விமானம் ஜெட்டாவுக்கும், டெல்லியில் இருந்து நியூயார்க் சென்ற விமானம் மிலனுக்கும், சிகாகோவில் இருந்து டெல்லி வந்த விமானம் ஜெட்டாவுக்கும் திருப்பி விடப்பட்டன. மும்பையில் இருந்து லண்டன் ஹீத்ரூ மற்றும் நியூயார்க் சென்ற விமானங்கள் மீண்டும் மும்பைக்கும், டெல்லியில் இருந்து வாஷிங்டன், டொராண்டோ சென்ற விமானங்கள் மீண்டும் டெல்லிக்கும் திரும்பி வந்தன. இப்படி இந்தியாவைப் பொறுத்தவரை நேற்று மதியம் வரை 16 விமானங்கள் பிற விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன.

இந்த பாதிப்புகள் குறித்து டெல்லி விமான நிலையம் பயணிகளுக்கு முன் எச்சரிக்கை தகவல்களை வழங்கியுள்ளது.

1 More update

Next Story