சந்திராயன் -2 விண்கலம் எடுத்த நிலவின் முதல் புகைப்படம் வெளியீடு

சந்திராயன் -2 எடுத்த நிலவின் முதல் புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
சந்திராயன் -2 விண்கலம் எடுத்த நிலவின் முதல் புகைப்படம் வெளியீடு
Published on

பெங்களூரு,

நிலவை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோவால் வடிவமைக்கப்பட்ட சந்திரயான்- 2 விண்கலம், கடந்த ஜூலை 22 ஆம் தேதி ஜி.எஸ்.எல்.வி. மார்க் III ஏவுகலன் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. பூமியின் சுற்றுவட்டப் பாதையில் சுற்றி வந்து கொண்டிருந்த சந்திரயான் -2 விண்கலமானது, ஆகஸ்ட் 14 ஆம் தேதியன்று பூமியின் சுற்றுவட்டப் பாதையில் இருந்து விலகி நிலவை நோக்கி நேர்கோட்டில் பயணிக்கத் துவங்கியது.

ஆர்பிட்டர், லேண்டர் மற்றும் ரோவர் என மூன்று நிலைகளை கொண்ட இந்த விண்கலம், ஆகஸ்ட் 20-ல் நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழைந்து நிலவைச் சுற்றி வருகிறது. அதன்பின் சுற்றுவட்டப் பாதையின் விட்டம் படிப்படியாக குறைக்கப்பட்டு இறுதியாக செப்டம்பர் 7 ஆம் தேதி நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், நிலவின் சுற்று வட்டப்பாதையில் சுற்றி வரும் சந்திராயன் 2, நிலவை புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது. இந்த புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. 2650 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து நிலவின் மேற்பரப்பை சந்திரயான் 2 விண்கலம் எடுத்திருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. புகைப்படத்தில் மரே ஓரியண்டல் தளம் மற்றும் அப்போலோ எரிமலைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com