விண்வெளி சுற்றுலாவுக்கு தயாராகும் இஸ்ரோ... கவனம் பெறும் ககன்யான் திட்டம்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்ட பணிகளை முழுவீச்சில் மேற்கொண்டு வருகிறது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

புதுடெல்லி,

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்ட பணிகளை முழுவீச்சில் மேற்கொண்டு வருகிறது. ககன்யானின் நோக்கம், பூமியின் தாழ்வான சுற்றுப்பாதைக்கு மனிதர்களை அனுப்பி, அவர்களை பாதுகாப்பாக பூமிக்கு திரும்ப அழைத்துவருவதாகும்.

இந்த திட்டத்திற்காக பயன்படுத்தப்பட உள்ள ராக்கெட் பூஸ்டரை இஸ்ரோ கடந்த மே மாதம் வெற்றிகரமாக பரிசோதித்தது. அடுத்தகட்டமாக அவசர காலத்தில் மனிதனை சுமந்துசெல்லும் விண்வெளி வாகனத்தில் வீரர்கள் இருக்கும் பகுதி கழன்றுகொள்ள வழிவகை செய்யும் அபார்ட் அமைப்பின் சோதனை வரும் செப்டம்பரில் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்திட்டம் குறித்து நாடாளுமன்றத்தில் பதிலளித்து இருக்கும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மந்திரி டாக்டர் ஜிதேந்திர சிங், விண்வெளி சுற்றுலாவை நோக்கி உள்நாட்டு சுற்றுலாவை மேம்படுத்தும் பணிகளில் இஸ்ரோ ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார்.

ஏற்கெனவே விண்வெளிக்கு பல நாட்டு செயற்கைக்கோள்களை அனுப்பி பல்வேறு சாதனைகளை படைத்துவரும் இஸ்ரோ, இனிவரும் காலங்களில் விண்வெளி சுற்றுலாவிலும் தடம் பதிக்க காத்திருக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com