சாதனை படைத்த இஸ்ரோ! ஆதித்யா எல்1 விண்கலம் லக்ராஞ்சியன் புள்ளியை அடைந்தது

சூரியனை ஆய்வு செய்ய அனுப்பப்பட்டுள்ள ஆதித்யா எல்.1 விண்கலம் லக்ராஞ்சியன் புள்ளியை அடைந்துள்ளது.
சாதனை படைத்த இஸ்ரோ! ஆதித்யா எல்1 விண்கலம் லக்ராஞ்சியன் புள்ளியை அடைந்தது
Published on

பெங்களூரு,

செவ்வாய், நிலவைத் தொடர்ந்து சூரியனின் புறவெளிப் பகுதிகளில் ஏற்படும் மாற்றங்களை ஆராயும் முனைப்பில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ஈடுபட்டுள்ளது. அதன்படி ஆதித்யா எல்-1 எனும் அதிநவீன விண்கலத்தை வடிவமைத்து பிஎஸ்எல்வி - சி-57 ராக்கெட் மூலம் கடந்தாண்டு செப்டம்பர் 2ஆம் தேதி வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள லக்ராஞ்சியன் பாயின்ட் ஒன் எனும் எல்-1 புள்ளியில், பூமிக்கும், சூரியனுக்கும் இடையேயான ஈர்ப்பு விசை சமமாக இருக்கும். அந்தப் புள்ளியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள ஆதித்யா விண்கலம், சூரிய புறவெளியின் வெப்பச் சூழல், கதிர்வீச்சு உள்ளிட்டவை குறித்து ஆராய உள்ளது.

ஏறத்தாழ 127 நாட்கள் பல கட்ட பயணத்தை மேற்கொண்டு ஆதித்யா விண்கலம் எல்-1 புள்ளி இலக்கில் சரியாக நிலை நிறுத்தப்பட்டுள்ளது. பெங்களூருவில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தில் இருந்தபடி விஞ்ஞானிகள் இந்தப் பணிகளை மேற்கொண்டனர். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இந்த விண்கலம் சூரியன் குறித்த ஆய்வை மேற்கொள்ளும். விண்வெளி துறையில் புதிய மைல் கல்லை இஸ்ரோ நிகழ்த்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com