விண்ணில் வெற்றிகரமாக சீறிப்பாய்ந்தது இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி. சி-54 ராக்கெட்..!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ, 'பி.எஸ்.எல்.வி.சி-54' என்ற ராக்கெட்டை இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
விண்ணில் வெற்றிகரமாக சீறிப்பாய்ந்தது இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி. சி-54 ராக்கெட்..!
Published on

ஸ்ரீஹரிகோட்டா,

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ, 'பி.எஸ்.எல்.வி.சி-54' என்ற ராக்கெட்டை இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

இந்த ராக்கெட் 'ஓசன்சாட்03' என்ற புவி செயற்கைக்கோள் மற்றும் 8 நானோ செயற்கைகக்கோள்களை சுமந்து சென்றது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-54 ராக்கெட், இன்று(சனிக்கிழமை) காலை 11.56 மணிக்கு விண்ணில் செலுத்தியது.

இன்று 56-வது முறையாக பி.எஸ்.எல்.வி. ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. அதோடு இந்த ஆண்டில் 5-வது மற்றும் கடைசி முறையாக இன்று பி.எஸ்.எல்.வி. ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com