கேரளாவில் 'அவதார்-2' திரைப்படம் வெளியாவதில் சிக்கல்...

கேரளாவில் ‘அவதார்-2’ திரைப்படத்தை வெளியிடுவதில் சிக்கல் எழுந்துள்ளது.
Image Courtesy : @Avatar2Official twitter
Image Courtesy : @Avatar2Official twitter
Published on

திருவனந்தபுரம்,

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ள 'அவதார்-2 தி வே ஆஃப் வாட்டர்' திரைப்படம் வரும் டிசம்பர் 16-ந்தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தியாவில் இந்த படத்திற்கான திரையரங்க முன்பதிவு தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கேரளாவில் அவதார்-2 திரைப்படம் வெளியாவதில் சிக்கல் எழுந்துள்ளது. கேரள மாநில திரையரங்க உரிமையாளர்களின் கூட்டமைப்பு (FEUOK) சார்பில், கேரளாவில் அவதார்-2 படத்தை திரையிடுவதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

அவதார்-2 படத்தின் முதல் 3 வார கலெக்ஷன்களில் இருந்து ஒவ்வொரு வாரமும் 60 சதவீதத்தை வழங்க வேண்டும் விநியோகஸ்தர்கள் என்று நிபந்தனை விதித்ததாக கூறப்படுகிறது. ஆனால் கேரளாவில் வேற்று மொழி படங்களின் கலெக்ஷனில் 50 சதவீதம் மட்டுமே விநியோகஸ்தர்களுக்கு வழங்கப்பட்டு வருவதாகவும், அதற்கு மேல் வழங்கினால் தங்களுக்கு நஷ்டம் ஏற்படும் என்றும் திரையரங்க உரிமையாளர்கள் தரப்பு கூறியுள்ளது.

இருதரப்புக்கும் இடையே உடன்பாடு ஏற்படாத காரணத்தால், அவதார்-2 திரைப்படம் கேரளாவில் வெளியாவதில் சிக்கல் நீடிக்கிறது. இதனிடையே நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி 3-டி வடிவில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள அவதார்-2 திரைப்படத்தை திரையரங்கில் காண முடியாமல் போகுமோ என்ற அச்சம் கேரள ரசிகர்களிடையே எழுந்துள்ளது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com