நீதிபதிகள் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு விவகாரத்தில் தன்னை விலக்கிக்கொள்ளும் மத்திய அரசு

நீதிபதிகள் பத்திரிக்கையாளர்களை சந்தித்த விவகாரத்தில் மத்திய அரசு தன்னை விலக்கிக்கொள்கிறது என தகவல்கள் வெளியாகி உள்ளது. #SupremeCourt #CJIDipakMishra
நீதிபதிகள் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு விவகாரத்தில் தன்னை விலக்கிக்கொள்ளும் மத்திய அரசு
Published on

புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டு மூத்த நீதிபதிகளான செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், குரியன் ஜோசப், மதன் பி லோகூர் ஆகியோர், சுப்ரீம் கோர்ட்டில் நிர்வாகம் சரியாக நடைபெறவில்லை, ஜனநாயகம் இல்லை என கூட்டாக பேட்டியளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் இவ்வாறு குற்றச்சாட்டுகளை முன்வைப்பது என்பது இந்திய வரலாற்றிலே இது முதல்முறையாகும்.

மேலும் 4 நீதிபதிகளும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு அனுப்பிய கடிதத்தின் நகலையும் வெளியிட்டனர்.

இவ்விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியும் மத்திய சட்டமந்திரி ரவிசங்கர் பிரசாத்திடம் பேசிஉள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

தலைமை நீதிபதி திபக் மிஸ்ரா, அட்டார்னி ஜெனரல் வேணுகோபாலை சந்தித்து பேசியதாகவும், இவர்கள் இருவரும் கூட்டாக பதிலை செய்தியாளர்கள் முன்னதாக அளிக்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

இப்போது பத்திரிக்கையாளர்களை நீதிபதிகள் சந்தித்த விவகாரத்தில் மத்திய அரசு தன்னை விலக்கிக்கொள்கிறது என செய்திகள் வெளியாகி உள்ளது.

முன்னெப்போதும் இல்லாத வகையில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் செய்தியாளர்களிடம் பேசியதை நீதித்துறையின் உள்விவகாரம் என மத்திய அரசின் உயர்மட்ட தகவல்கள் தெரிவித்து உள்ளது, இது அரசு இவ்விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை என்பதை குறிப்பிட்டு காட்டுகிறது. இவ்விவகாரத்தில் அரசு பேசுவதற்கு எதுவும் கிடையாது, இதில் தலையிட அரசு விரும்பவில்லை என உயர்மட்ட தகவல்கள் தெரிவித்து உள்ளது. விவகாரம் நீதித்துறையின் உள்விவகாரம் என மத்திய அரசு தகவல்கள் குறிப்பிடுவதாக செய்தி வெளியாகி உள்ளது. சுப்ரீம் கோர்ட்டு இப்பிரச்சனையை மிக விரைவில் சரிசெய்ய வேண்டும் என உயர்மட்ட தகவல்கள் தெரிவித்து உள்ளன.

இதற்கிடையே மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் பிரதமர் மோடியை இவ்விவகாரம் தொடர்பாக இதுவரையில் சந்திக்கவில்லை என சட்ட அமைச்சக தகவல்கள் தெரிவித்து உள்ளன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com