தியேட்டரில் இருந்துகொண்டே லேப்டாப்பில் வேலை பார்த்த ஐ.டி. பெண் ஊழியர்

சமூகவலைதள பயனர்கள் பலரும் ஆதரவாகவும், எதிராகவும் கருத்து பதிவிட்டு வருகிறார்கள்.
தியேட்டரில் இருந்துகொண்டே லேப்டாப்பில் வேலை பார்த்த ஐ.டி. பெண் ஊழியர்
Published on

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த ஒருவர் ரெடிட் என்ற சமூக வலைதள பக்கத்தில் ஐ.டி. பெண் ஊழியர்கள் ஒருவர் தியேட்டரில் படம் பார்க்க சென்று, அங்குள்ள இருக்கையில் அமர்ந்து மடிக்கணினியில் அலுவலக வேலையை பார்த்ததாக ஒரு புகைப்படத்தை பதிவிட்டு ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார். அதில், கர்நாடக தலைநகரான பெங்களூருவில் குழப்பமான வேலை கலாசாரம் என தலைப்பிட்டு இந்த பதிவை வெளியிட்டுள்ளார்.

நான் பெங்களூருவில் உள்ள ஒரு தியேட்டரில் படம் பார்க்க சென்றேன். அப்போது முன்வரிசையில் அமைந்திருந்த ஒரு ஐ.டி.பெண் ஊழியர் மடிக்கணினியை திறந்து அலுவலகத்தில் இருந்து வேலை பார்ப்பது போல் தட்டச்சு செய்து வேலை செய்யத் தொடங்கினார் என கூறியுள்ளார். இது வைரலாகி வருகிறது. இதற்கு சமூகவலைதள பயனர்கள் பலரும் ஆதரவாகவும், எதிராகவும் கருத்து பதிவிட்டு வருகிறார்கள்.

சிலர், அந்த பெண் திறமையான நபர் இல்லை. இதனால் தியேட்டரில் படம் பார்க்கும் நேரத்திலும் வேலை பார்த்துள்ளார் என குற்றம்சாட்டினர். மேலும் சிலர், படத்திற்கு முன் ஏன் நேரத்தை வீணாக்க வேண்டும் என கருதி வேலையை சீக்கிரமாக முடிக்க அந்த பெண் இவ்வாறு செயல்பட்டிருக்கலாம் என ஆதரவாக கருத்து பதிவிட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com