

புதுடெல்லி,
வெங்காய விலையை கேட்டாலே கண்ணீர் வரும் என்ற சூழல் உருவாகி உள்ளது. சாதாரணமாக கிலோ ரூ.70 முதல் ரூ.90 வரை விற்கிறது.
இந்த நிலையில் மத்திய உணவு, நுகர்வோர் விவகாரங்கள் துறை மந்திரி ராம்விலாஸ் பஸ்வான், உயர் அதிகாரிகளின் கூட்டத்தை கூட்டி டெல்லியில் நேற்று ஆலோசனை நடத்தினார்.
அதைத் தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
வெங்காயம், தக்காளி ஆகியவற்றின் விலை உயர்வுக்கு காரணம், தேவைக்கும், சப்ளைக்கும் உள்ள இடைவெளிதான்.
வெங்காய விலையை உடனடியாக குறைப்பது என்பது என் கைகளில் இல்லை.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு வெங்காயம் உற்பத்தி செய்கிற மாநிலங்களில் விதைப்பு குறைவாகத்தான் நடந்துள்ளது.
கரீப் பருவ வெங்காய அறுவடை நடந்த பின்னர், அதன் விலை குறையத் தொடங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.