இந்தியாவில் இதுவரை 7.59 கோடி ‘டோஸ்’ தடுப்பூசிகள் போடப்பட்டதாக தகவல்

இந்தியாவில் இதுவரை 7.59 கோடி ‘டோஸ்’ தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் இதுவரை 7.59 கோடி ‘டோஸ்’ தடுப்பூசிகள் போடப்பட்டதாக தகவல்
Published on

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி திட்டம் கடந்த ஜனவரி மாதம் 16-ந் தேதி தொடங்கி தொடர்ந்து நடந்து வருகிறது. நேற்று காலை நிலவரப்படி 7 கோடியே 59 லட்சத்து 79 ஆயிரத்து 651 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இதில் 43 சதவீத தடுப்பூசிகள் (3 கோடியே 33 லட்சத்து 10 ஆயிரத்து 437 தடுப்பூசிகள்) மராட்டியம், குஜராத், உத்தரபிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநிலங்களில் மட்டுமே போடப்பட்டுள்ளன.

மராட்டிய மாநிலத்தில் இதுவரையில் 73 லட்சத்து 54 ஆயிரத்து 244 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இது மொத்த தடுப்பூசிகளில் 9.68 சதவீதம் ஆகும். அதற்கு அடுத்தபடியாக குஜராத்தில் 69 லட்சத்து 23 ஆயிரத்து 8 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

உத்தரபிரதேசத்தில் 66 லட்சத்து 43 ஆயிரத்து 96 தடுப்பூசிகளும், ராஜஸ்தானில் 64 லட்சத்து 31 ஆயிரத்து 601 தடுப்பூசிகளும், மேற்கு வங்காளத்தில் 59 லட்சத்து 58 ஆயிரத்து 488 தடுப்பூசிகளும் போடப்பட்டிருக்கின்றன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com